Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நிதிஷ்குமாரைச் சந்திக்கிறார் மீரா குமார்! 

மீரா குமார்

குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர் மீரா குமார், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரைச் சந்திக்கவுள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், பி.ஜே.பி சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் ராம்நாத் கோவிந்தும், மீரா குமாரும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று ஆதரவைத் திரட்டி வருகின்றனர். தமிழகத்துக்கு வருகை தந்த மீரா குமார் தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்து உடல்நலம் பற்றி விசாரித்ததுடன் அவரிடம் வாழ்த்தும் பெற்றார். தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடமும் ஆதரவு கோரினார். அதுபோல், புதுச்சேரி சென்ற மீரா குமார் அங்கு முதல்வர் நாராயணசாமியைச் சந்தித்து ஆதரவு கோரினார்.

இதேபோன்று தமிழகம் வந்த ராம்நாத் கோவிந்த், அ.தி.மு.க அணியினரைச் சந்தித்து ஆதரவுகோரினார். இப்படி இருவரும் தங்களுக்கு ஆதரவு கேட்டு ஒவ்வொரு மாநில முதல்வர்களையும் சந்தித்து வருகிறார்கள். இந்த நிலையில், வரும் ஜூலை 6-ம் தேதி மீரா குமார், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரைச் சந்திக்கவுள்ளார். நிதிஷ்குமார், ஏற்கெனவே ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தகவல் தெரிவித்த பீகார் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சதானந்த் சிங், 'மீரா குமார், அனைவரிடமும் ஆதரவு கோருவதில் தவறில்லை. நிதிஷ்குமார், ஏற்கெனவே ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இருப்பினும், அவரைச் சந்திப்பதில் தவறில்லை' என்றார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close