Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடி டீ விற்ற இடம் சுற்றுலா தலமாகிறது!

பிரதமர் நரேந்திர மோடி, தன்னுடைய சிறிய வயதில் தனது தந்தையுடன் இணைந்து டீ விற்ற கடை மற்றும் அப்பகுதியை ரயில்வே துறையுடன் இணைந்து சுற்றுலாத்தலமாக்கப்படும். என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக, மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா பேசும்போது, "வாத்நகர் பகுதியில் வர்த்தக வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில், உலக வரைபடத்தில், வாத்நகர் ரயில்வே ஸ்டேசன் மற்றும் அப்பகுதியை இடம்பெற செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட உள்ளது. வாத்நகர் ரயில்வே ஸ்டேசன் மற்றும் அப்பகுதியை சுற்றுலாத்தலமாக்கவும் முடிவெடுத்துள்ளோம். இதற்காக மத்திய சுற்றுலாத்துறை, ரயில்வே துறையுடன் இணைந்து செயல்பட உள்ளது" என்றார்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close