Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜிஎஸ்டி-யைக் கண்காணிக்க அதிகாரிகளுக்குக் கேபினட் செயலர் அறிவுரை!

ஜி.எஸ்.டி

ஜிஎஸ்டி வரி அமலாக்கத்துக்குப் பிறகு, அதன் தாக்கம்குறித்து ஆய்வு நடத்திய கேபினட் செயலர் பி.கே.சின்ஹா, விலை உயர்வைக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர், ''புதிய வரிமுறை நடைமுறைக்கு வந்தபிறகு, அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் அவற்றின் விலை கட்டுப்பாட்டில் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்; இது தவிர, சில்லறை விற்பனையாளர்கள், மொத்த வியாபாரிகள் - கடைக்காரர்கள் போன்றோர், தாங்கள் விற்கும் பொருள்களின் விலைப் பட்டியலைப் 'பார்வைக்கு வைக்க வேண்டும்' என்று அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்; ஜிஎஸ்டி-யின் பலன், நுகர்வோருக்குச் சென்றடைய வேண்டும்; விற்பனையாளர்கள், தாங்கள் பயன்படுத்தும் கணினிகள், இயந்திரங்களைப் புதிய வரி விகிதங்களுக்கு ஏற்ப விரைவில் மாற்றியமைக்க வேண்டும்; அதிகாரிகளும், தங்களை அனைத்து சந்தேகங்களையும் தீர்த்துவைக்கக்கூடிய அளவில் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்'' என அறிவுரை வழங்கினார்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close