Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பத்துக் குழந்தைகளுடன் விருந்து! மணிப்பூர் ஐஏஎஸ் அதிகாரியின் வைரல் அறிவிப்பு

மணிப்பூர் மாநில ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், 'வாரம் 10 குழந்தைகளுடன் தனது அலுவலகத்தில் விருந்தில் பங்கேற்று, அவர்களுடன் மாவட்ட நிர்வாகம் குறித்து பேச உள்ளேன்' என்ற அறிவிப்பு, சமூக வலைதளங்களில் அதிகப் பாராட்டைப் பெற்றுவருகிறது. 


மணிப்பூரில் டாமேங்க்லாங் (tamenglong) மாவட்டத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணிபுரிபவர், ஆம்ஸ்ட்ராங் பாமே என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞர். இவர், நேற்று பிறப்பித்த உத்தரவுதான் இப்போது செம வைரலாகப் பரவிவருகிறது. இவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஐந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் 10 மாணவர்களை எனது அலுவலகத்தில் விருந்தில் பங்கேற்கச் செய்யப்போகிறேன். அப்போது அவர்கள், மாவட்ட நிர்வாக நடவடிக்கைகளைப் பார்வையிடலாம். வருங்காலத்தில், மாவட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தையும் அப்போது கேட்க உள்ளேன். இந்த மாணவர்கள், மாவட்டத்தின் அனைத்துப் பள்ளிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்" என்று கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பை தனது ஃபேஸ்புக்கில் பதிவுசெய்துள்ள அவர், தான் சிறு வயதில் இந்த அலுவலகத்தைக் கடந்துசெல்லும்போது, அங்கு என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆசையாக இருப்பேன் என்றும், தற்போது நான் இங்கு அதிகாரியாக இருக்கும் போது மாணவர்களுடன் சேர்ந்து விருந்தில் பங்கேற்க உள்ளது, அவர்களது கனவை நனவாக்க உதவும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவர், ஏற்கெனவே அரசின் உதவியை எதிர்பாராமல் இளைஞர்கள், தன்னார்வலர்கள்  உதவியுடன் மணிப்பூரை அசாம் மற்றும் நாகலாந்துடன் இணைக்கும் 100 கி.மீ தூர சாலையை அமைத்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியை அவர் சமூகவலைதளமான ஃபேஸ்புக் மூலம் பெற்றார். இதானால், ஃபேஸ்புக் நிறுவனம் அவரைத் தனது தலைமை இடமான கலிஃபோர்னியாவுக்கு அழைத்து, கௌரவப்படுத்தியது.  

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close