Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘காங்கிரஸ், இந்திய ராணுவத்தை அவமானப்படுத்துகிறது!’ - பா.ஜ.க. குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சி, இந்திய ராணுவத்தைத் தொடர்ச்சியாக அவமானப்படுத்திவருவதாக, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரகாஷ் ஜவடேகர்

சில நாள்களுக்கு முன்னர் காங்கிரஸ், 'இந்திய - சீன எல்லையில், சீனா தொடர்ச்சியாக அத்துமீறிவருகிறது. ஆனால், இந்திய அரசு இந்த விஷயத்தில் தூங்குகிறது' என்றும், 'இந்தய அரசு தற்போது பகுதி நேர ராணுவ அமைச்சரை நியமித்துள்ளது' என்றும் குற்றம் சாட்டியது. 

இதையொட்டி மத்திய அமைச்சர் ஜவடேகர், 'இந்திய - சீன எல்லையில் என்ன நடக்கிறது என்று காங்கிரஸ் கேள்வி எழுப்புகிறது. முன்னர் அவர்கள், சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்டனர். இதன்மூலம் அவர்கள், மொத்த இந்திய ராணுவத்தையே அவமானப்படுத்தியுள்ளனர்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவை ஆண்ட கட்சியிடமிருந்து இதைப் போன்ற கீழ்த்தரமான கருத்துகள் வருகின்றன. அவர்கள், வெளியுறவுக் கொள்கை மற்றும் ராணுவக் கொள்கைகளைக் கேள்வி கேட்கின்றனர். இது மிகவும் கண்டனத்துக்குரியது. ராணுவத்தை இப்படி அவமானப்படுத்துவதை யாராக இருந்தாலும் கண்டனம் செய்வார்கள்' என்று அடுக்கடுக்காக காங்கிரஸ் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close