Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆடு, மாடுகளைத் தொடர்ந்து ’சிக்கனுக்கும்’ சிக்கலா? : சட்டவிவகாரங்கள்துறை மத்திய அரசுக்குப் பரிந்துரை

ஆடு, மாடுகளைத் தொடர்ந்து சிக்கனுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் வகையில், கோழி வளர்ப்பு மற்றும் போக்குவரத்து தொடர்பாக, நடைமுறையில் இருக்கும் இந்திய அரசாணை விதிகள்குறித்தும் சர்வதேச நடைமுறைகுறித்தும் சட்ட விவகாரங்கள்துறை, சில விதிமுறைகளை மத்திய அரசுக்குப் பரிந்துரைசெய்துள்ளது.

கோழி

மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அறிவுறுத்தலின் பேரில், சட்ட விவகாரங்கள்துறை, இந்தியாவில் நடைமுறையில் உள்ள கோழி வளர்ப்பு முறைகள்குறித்து ஓர் ஆய்வை சமீபத்தில் நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில், ‘நாட்டுக்கோழி மற்றும் பிராய்லர் கோழி’ வளர்ப்பு, விற்பனைகுறித்து சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. நாட்டுக்கோழிகள்குறித்த ஆய்வில், சேவல் மற்றும் முட்டையிடும் கோழிகளின் வளர்ப்பு முறைகளில் உள்ள சிக்கல்கள் ஆராயப்பட்டன. பிராய்லர் கோழிகளைப் பொறுத்தமட்டில், அதன் வளர்ப்பு முறைகள், இருப்பிட அமைப்பு முறை, உணவு முறை, போக்குவரத்து மற்றும் இறைச்சிக்காக அவை கொல்லப்படும் முறை ஆகியவை ஆராயப்பட்டன. இதையடுத்து 41 பக்கங்கள்கொண்ட அறிக்கையை மத்திய அரசுக்கு சட்ட விவகாரங்கள்துறை அனுப்பியுள்ளது. 

அரசுக்கு பரிந்துரை

அந்த அறிக்கையில், 'விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளிலிருந்து பாதுகாக்கும் சட்டம்’ அடிப்படையில், கோழிகளை வளர்க்கும் மற்றும் இறைச்சிக்காக எடுக்கப்படும் முறைகுறித்து சில விதிமுறைகள் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன. மேலும் அறிக்கையில், கோழி வளர்ப்பில் பின்பற்றப்படும் முறைகள், அதற்கான இருப்பிடம், மருத்துவப் பாதுகாப்பு, இறைச்சிக்காகப் பயன்படுத்தப்படும் கோழிகளின் வயது, எடை மற்றும் ஆரோக்கியம் ஆகிய அனைத்தும் விதிமுறைப்படி ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்து, கோழிகளை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு வாகனத்தில் கொண்டுசெல்லும்போது, கூண்டுகளில் அடைத்து கொடுமைப்படுத்தும் முறை கைவிடப் பட வேண்டும். போக்குவரத்தின்போது, அதற்குத் தேவையான தண்ணீர், உணவு, இடவசதியை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, கோழிகளுக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. 

 இந்தப் பரிந்துரைகளை மத்திய அரசு சட்டமாக்கினால், ஆடு, மாடுகளைத் தொடர்ந்து சிக்கனுக்கும் சிக்கல் ஏற்படக்கூடும்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close