Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டாஸ்மாக் கடைகளுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் கருத்து!

'நெடுஞ்சாலைகளை மாநகர சாலைகளாக மாற்றுவதில் தவறில்லை' என டாஸ்மாக் கடைகளுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

உச்சநீதிமன்றம்

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுபானக் கடைகளை மூட உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, பல்வேறு கடைகள் மூடப்பட்டதுடன், ஹோட்டல் மற்றும் நட்சத்திர விடுதிகளிலும் மதுபானங்கள் விற்பனை தடை செய்யப்பட்டது. இதனிடையே பல்வேறு பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலைகளை மாநில சாலைகளாக மாற்றி, மதுபானக் கடைகளை திறக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும் பஞ்சாப் சட்டப்பேரவையில், நெடுஞ்சாலைகளில் இருக்கும் ஹோட்டல்களில் மதுவுக்கு அனுமதியளிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், பஞ்சாப் அரசின் தீர்மானத்துக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'நெடுஞ்சாலைகளை மாநகர சாலைகளாக மாற்றுவதில் தவறில்லை. நெடுஞ்சாலை பகுதிகளில் மதுவால் அதிவேகமாகச் சென்று விபத்துகள் அதிகளவில் நடப்பதைத் தடுக்கவே, மதுபானக் கடைகளுக்குத் தடை அறிவிக்கப்பட்டது. மாநகர சாலைகளில் வாகன நெரிசல் காரணமாக இதுபோன்ற பிரச்னை கிடையாது' என்று கூறியுள்ளனர். மேலும், பஞ்சாப் அரசின் தீர்மானத்துக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close