Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவின் பிரம்மாண்ட ஃபேஷன் திருவிழா!

இந்தியாவின் ஃபேஷன் டிசைன் வடிவமைப்பு கவுன்சில் (FDCI-Fashion Design Counsil of India), வருகிற 24-ம் தேதி, டெல்லி தாஜ் பேலஸ் ஹோட்டலில் பிரமாண்ட ஃபேஷன் கண்காட்சியை நடத்த இருக்கிறது. அதில் இந்தியா கோர்சூர் வீக்'கின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவுக்கான 'ஃபேஷன் ஷோ' நிகழ்ச்சி பட்டியலில் முக்கிய நிகழ்வாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆடம்பர ஃபேஷன் ஷோ இந்தியாவின் பல முன்னணி மாடல்கள் மற்றும் பிரபல ஃபேஷன் டிசைனர்களை வைத்து அரங்கேற்றப்படவுள்ள இந்நிலையில், அனிதா டோங்க்ரே, தருண் தஹிலியாணி மற்றும் வருண் பால் முக்கிய விருந்தினராக பங்கேற்க உள்ளனர். ஃபேஷன் வடிவமைப்பாளர்கள் இந்தியாவின் பாரம்பர்ய வண்ணங்கள் கொண்ட ஆடைகளையும், விலை உயர்ந்த ஆபரணங்களையும் காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, FDCIன் தலைவர், சுனில் சேத்தி, "இது எங்களின் மறக்கமுடியாத பத்தாம் ஆண்டு கொண்டாட்டமாக அமையும் என்று நம்புகிறோம். இந்தியா கோர்ச்சூர் வீக்கின் இந்தப் பயணம், பல்வேறு நாடுகளிலிருந்து பலவகையான ஆடம்பர  ஆடைகளை நம் நாட்டுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த குறுகிய கால வெற்றியில் இந்தியா பேஷன் கவுன்சிலுக்கு மிக முக்கிய பங்கு உண்டு.  மேலும், இந்த ஆண்டு பல வளர்ந்து வரும் திறமையான மாடல்களையும், பாரம்பர்ய மற்றும் விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களையும் பேஷன் உலகுக்கு அறிமுகப்படுத்துவதில் மிகவும் பெருமை அடைகிறோம்" என்று கூறியுள்ளார்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close