Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் தொடங்கி, இறக்கத்தில் முடிந்த பங்குச்சந்தை!

ஜிஎஸ்டி அறிமுகத்தால் ஏற்றம் கண்டதாகக் கூறப்பட்ட இந்தியப் பங்குச்சந்தை நிலவரம் இன்று மதியத்துக்குப் பின் சரிவைச் சந்தித்து சரிவிலேயே நிறைவடைந்தது.

பங்குச்சந்தை

ரிசர்வ் வங்கியின் அந்நிய முதலீடுகளுக்கான வரம்பு நிர்ணயம் இன்றைய இந்தியப் பங்குச்சந்தையில் எதிரொலித்தது. சமீபத்தில் ஜிஎஸ்டி என்னும் புதிய வரிவிதிப்பு முறையால் இந்திய வர்த்தகத்தில் அதிகளவிலான முதலீடுகள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்பட்டது. அதனால், ஜிஎஸ்டி அறிமுக நாளில் ஏற்றத்தில் இருந்த பங்குச்சந்தை நிலவரங்கள் இன்று சரிவைச் சந்தித்துள்ளது.

இன்று மாலை வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 11.83 புள்ளிகள் வீழ்ந்து, 31,209 புள்ளிகளாக நிறைவடைந்தது. அதே வேளை, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 1.70 புள்ளிகள் குறைந்து, 9,613 புள்ளிகளாகி நின்றது.

ஜூலை 4-ம் தேதியான இன்றிலிருந்து ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி நாட்டின் முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணிகளுள் ஒன்றான அந்நிய முதலீடுகளுக்கு வரம்பு எல்லை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதிமுறை மாற்றங்களால் பங்குச்சந்தையில் குறைந்த அளவிலான சரிவு ஏற்பட்டிருக்கலாம் என வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close