Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இஸ்ரேலில் பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு!

அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள மோடிக்கு, விமான நிலையத்தில் அந்நாட்டு பிரதமரால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மோடி இஸ்ரேல்

அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் பிரதமர் மோடி. குறிப்பாக அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப்புடன் அவர் இருநாட்டு உறவுகள் குறித்து விவாதித்தார். இதையடுத்து இந்தியா வந்த அவர், குஜராத்தில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, ஜிஎஸ்டி வரியை அமலுக்கு கொண்டுவந்துவிட்டு, மீண்டும் வெளிநாட்டுக்கு பறந்துள்ளார். அதுவும் இதுவரை இந்தியப் பிரதமர் எவரும் சென்றிராத இஸ்ரேல் நாட்டுக்கு சென்றுள்ளார்.

இதனிடையே பிரதமர் மோடி, இஸ்ரேல் விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளார். விமான நிலையத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மோடியை வரவேற்றார். மேலும், மோடிக்கு அங்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே உள்ள 25 ஆண்டுகால உறவை சிறப்பிக்கும் வகையில் இந்த சுற்றுப்பயணம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close