Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜி.எஸ்.டி இணையதளத்தில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவு! 

ஜி.எஸ்.டி

''ஜி.எஸ்.டி அமலாக்கத்துக்குப் பிறகு, அதன் இணையதளத்தில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர்  பதிவுசெய்துள்ளனர்'' என வருமானவரித் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''ஜி.எஸ்.டி அமலாக்கத்துக்குப் பிறகு, அதன் இணையதளத்தில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவுசெய்துள்ளனர். 39,000 பேர் ஏற்கெனவே பதிவுசெய்துள்ளனர். சிறுகுறு வணிகர்கள் ஏற்கெனவே பதிவுசெய்துள்ள வரியைச் செலுத்தினால் போதும். 75 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட அதிக வருவாய் கொண்ட தொழில்கள், பில் அவசியம் கொடுக்கப்பட வேண்டும்.  'ஜி.எஸ்.டி-க்கு முன்... ஜி.எஸ்.டி-க்குப் பின்' உள்ள விலையை தெளிவாகப் பொருள்களில் பதிவிட வேண்டும்.  பொருள்கள் மீதான எம்.ஆர்.பி விலையைச் செப்டம்பர் 30-க்குள் மாற்றிக்கொள்ள வேண்டும். ஒரு பொருளின் விலையை, மூன்று மாதங்களுக்குத்  தெளிவாக ஸ்டிக்கர்களில் பதிவுசெய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close