Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உ.பி-யில் சைக்கிள் தனிப்பாதைகளைத் தகர்க்க யோகி அரசு முடிவு!

யோகி

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கொண்டுவந்த சைக்கிள் தனிப்பாதை திட்டத்துக்குத் தற்போதைய பி.ஜே.பி அரசு முற்றுப்புள்ளி வைக்கவுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில், அகிலேஷ் யாதவ் ஆட்சியின்போது... அந்த மாநிலத்தில் அனைத்துப் பெரிய  நகரங்களின் சாலைகளிலும் சைக்கிள் செலுத்த தனிப்பாதைகள் ஏற்படுத்தப்பட்டன. ''இந்தப் பாதைகள் தொடர்பாக மக்களிடமிருந்து பெறப்பட்ட ஏராளமான புகார்களை அடுத்து, அவற்றைத் தகர்ப்பதற்கு முடிவுசெய்யப்பட்டிருக்கிறது'' என அம்மாநில நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் சுரேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

இந்தச் சைக்கிள் தனிப்பாதை திட்டம், மாநிலம் முழுவதும் 500 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. இதை, உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் நிதியிலிருந்து அமைத்தன. மாநிலத்தில் இரு நகரங்களுக்கு இடையிலான சைக்கிள் தனிப்பாதையை அகிலேஷ் யாதவ் 2016-ம் ஆண்டில் தொடங்கிவைத்தார். எடாவா - ஆக்ரா இடையிலான  207 கி.மீட்டர் தொலைவுள்ள இந்தப் பாதை 134 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. இதுகுறித்து அகிலேஷ் யாதவ், ''யோகி அரசு, சைக்கிள் பாதையைத் தகர்த்து சாதனை செய்கிறது. ஆக, மத்திய அரசும் மாநில அரசும் முரண்பட்டு இரட்டை நிலையை கடைபிடிக்கின்றன'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close