Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மக்களைத் திருப்பியனுப்பினால் அபராதம்! ஆதார் ஏஜென்ஸிகளுக்கு எச்சரிக்கை!

ஆதார் அட்டை

ரசின் அனைத்துச் சேவைகளுக்கும் இன்று ஆதார் அட்டை முக்கியமானதாக இருந்துவருகிறது. இந்த ஆதார் அட்டைக்காக குறிப்பிட்ட மையங்களில் புகைப்படம் எடுக்கவோ, பெயர் சேர்க்கவோ மக்கள் செல்லும்போது, அங்குள்ள ஏஜென்ஸிகள் போலியான காரணங்களைச் சொல்லி, அதாவது 'இயந்திரம் பழுதடைந்திருக்கிறது' என்று சொல்லி அங்கு வரும் மக்களைத் திருப்பியனுப்புகின்றன. ஆனால், இனிமேல் அப்படிப் போலியான காரணங்களைச் சொன்னால் அபராதம் விதிக்கப்படும் என உதய் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, ஆதார் அட்டை வழங்கும் நிறுவனமான, இந்திய தனிப்பட்ட அடையாள ஆணைய அமைப்பின் (உதய்) தலைமைச் செயல் அதிகாரி அஜய்பூஷண் பாண்டே, ''ஆதாரில் பெயர்களைச் சேர்க்க மறுப்பது ஊழல் நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். வரும் காலங்களில், அரசு அலுவலகங்களில் ஆதார் மையங்கள் நேரடி கண்காணிப்பின்கீழ் செயல்படும். இயந்திரத்தை இயக்கும் ஆபரேட்டர், எங்கள் வலைதளத்தில் சேவைகள் பட்டியலைத் தெரிவிக்க வேண்டும். அவர், பதிவுசெய்ததுமே அவர்களது இயந்திரங்கள் வேலை செய்கின்றன என்றும், அவர்கள் ஆதாரில் மக்களைச் சேர்க்கத் தயாராக இருக்கிறார்கள் என்றும் கருதப்படும்.

இதனால், ஏஜென்ஸிகள் இனிமேல் போலியான காரணங்களைக் கூறி மக்களைத் திருப்பி அனுப்ப முடியாது. எனவே, அனைத்து ஆதார் பெயர் சேர்ப்பு நிறுவனங்களுக்கும் ஆபரேட்டர்களுக்கும் இதுதொடர்பாக எங்கள் கள அதிகாரிகள்மூலம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளோம். சேர்க்க மறுத்தால், புகார் செய்யும்படி பொதுமக்களையும் கேட்டுக்கொண்டுள்ளோம். எனவே, இதுபோன்ற செயலில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முதல் குற்றமாக விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதே தவற்றை மீண்டும் செய்தால், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதன்பின்னரும் தொடர்ந்து ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அந்த நிறுவனங்கள் தடை செய்யப்படும்'' என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close