Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியக் கடல்களில் மிதக்கும் 1.3 ட்ரில்லியன் பிளாஸ்டிக்!

உலகில் உள்ள கடல் பரப்பு முழுவதிலும் மொத்தமாக 5.25 ட்ரில்லியன் பிளாஸ்டிக் பொருள்கள் மிதப்பதாகவும் இதில் இந்தியப் பெருங்கடலில் மட்டும் 1.3 ட்ரில்லியன் பிளாஸ்ட்டிக் பொருள்கள் மிதந்துகொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிளாஸ்ட்டிக்

ஏற்கெனவே வெப்பமயமாதல், பருவநிலை மாற்றங்கள் போன்ற அபாயங்களை இயற்கைச் சந்தித்துவரும் நிலையில் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்பட்டு கடல்நீரை மாசுபடுத்தும் அபாயம் அதிகரித்து வருகிறது. பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைத் தவிர்க்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும் பிளாஸ்டிக் பயன்பாட்டையோ அவை நீர்நிலைகளில் கொட்டப்படுவதையோ தடுக்கமுடியவில்லை. இதன் விளைவு நாளுக்கு நாள் மக்காத தன்மையுடைய பிளாஸ்டிக் பொருள்களின் கழிவுகள் நீர்பரப்புகளை ஆக்கிரமித்து வருகின்றன. 

அப்படி கடல் பரப்பில் மிதக்கும் பிளாஸ்டிக்குகளின் எண்ணிக்கையை நியூசிலாந்தைச் சேர்ந்த ஒரு தகவல் ஆய்வு நிறுவனம் கணக்கிட்டுள்ளது. இந்த ஆய்வின்படி உலகிலுள்ள அனைத்துக் கடல் பரப்புகளின் மீது மிதந்துகொண்டிருக்கும் பிளாஸ்ட்டிக்குகளின் எண்ணிக்கை 5.3 ட்ரில்லியன் என்றும், இதில் 1.3 ட்ரில்லியன் பிளாஸ்ட்டுகள் இந்தியக் கடல் பரப்புகளில் மட்டுமே கொட்டப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. 

இதற்கு முன் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில் கடல் பரப்புகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளில் 60 சதவிகிதத்துக்குக் காரணமான நாடுகள் சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய 5 நாடுகள்தான். அதிகரித்து வரும் கடல் கழிவுகள் கடல் வாழ் உயிரினங்களுக்கும், மனிதர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன.  

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close