Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்துக்கு தீ வைப்பு! டார்ஜிலிங்கில் பதற்றம்

டார்ஜிலிங்கில் திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

திரிணாமூல் காங்கிரஸ் அலுவலகத்துக்கு தீ வைப்பு

டார்ஜிலிங்கில் பெரும்பான்மையாக வசிக்கும் கூர்க்கா இன மக்கள் நீண்ட காலமாகவே தனி மாநில கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனிடையே, அண்மையில் மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் வங்கமொழி கட்டாயம் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்ததையடுத்து, கூர்க்கா இனமக்கள் போராட்டம் தீவிரமடைந்தது. கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பின் சார்பாக பேரணிகளும், தொடர் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இதனால், அங்கு பல்வேறு வன்முறைச் சம்பவங்களும், உயிரிழப்பும் ஏற்பட்டன.

இந்நிலையில், இன்று டார்ஜிலிங்கில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில போக்குவரத்து வாரியத்தின் டிக்கெட் கவுண்டர் மற்றும் சில பேருந்துகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டார்ஜிலிங்கில் பதற்றமான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க,  நாளையில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கூர்க்கா ஜனசக்தி மோர்ச்சா அமைப்பு அறிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close