Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மேற்கு வங்கத்தில் மதக்கலவரம்... 144 தடை உத்தரவு அமல்!

மேற்கு வங்கத்தில் பாதுரியா என்ற இடத்தில் மதக்கலவரம் ஏற்பட்டதையடுத்து, அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம், மதக்கலவரம்

கடந்த 4-ம் தேதி மேற்குவங்கத்தில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாதுரியா என்ற பகுதியில் மதக்கலவரம் வெடித்தது. ஃபேஸ்புக்கில் குறிப்பிட்ட ஒரு மதத்தைப் பற்றி இழிவாகப் பதிவிட்டதையடுத்து அங்கு இரு தரப்பினரிடையே கலவரம் உருவாகியது. இதையடுத்து, பல்வேறு தீ வைப்புச் சம்பவங்கள் அங்கு அரங்கேறின. மேலும், அங்குள்ள காவல்நிலையமும் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு மத்திய துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கலவரம் நடந்த பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகள் பரவாமல் தடுக்க, இன்டர்நெட் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, கலவரம் ஏற்பட்ட விவகாரத்தில், மேற்குவங்க ஆளுநர் திரிபாதி, தன்னை மிரட்டி அவமானப்படுத்தியதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் முதலமைச்சர் மம்தா பானர்ஜி. மேலும், ஆளுநர்போல் இல்லாமல், பா.ஜ.க. மாவட்டத் தலைவர்போல் அவர் பேசினார் என்று மம்தா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close