Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

6 மணிக்கு மேல் பெண்கள் கல்லூரிக்குள் இருக்கக்கூடாது... லக்னோவில் வினோத உத்தரவு!

லக்னோ பல்கலைக்கழகத்தில் 6 மணிக்கு மேல் பெண்கள் பணியில் இருக்கக்கூடாது என்ற உத்தரவுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Lucknow University orders womens not stay after 6

ஐந்து மாநில தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற பா.ஜ.க, ஆதித்யநாத் தலைமையில் ஆட்சியமைத்தது. இதையடுத்து பசுவதைக்குத் தடை, ஆண்டி-ரோமியோ படை என பல்வேறு சர்ச்சைகள் உ.பியில் வெடித்தன. இது ஒருபுறம் இருக்க, உத்தரப்பிரதேசத்தில் அண்மைக்காலமாக பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த மாதம் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு, அவரது குழந்தையும் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பியது. 

இந்நிலையில், கடந்த 4-ம் தேதி லக்னோ பல்கலைக்கழகத்தில் 6 மணிக்கு மேல் பெண்கள் வேலை பார்க்கக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பெண்களின் பாதுகாப்பு கருதி இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டது. இதையடுத்து சமூக ஆர்வலர்கள் இந்த உத்தரவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். 'பெண்கள் முன்னேற்றத்துக்காக அரசு முயற்சி எடுத்து வருகையில், இப்படியான உத்தரவு மிகவும் பிற்போக்கானது. எந்த நேரத்தில் பணி செய்தாலும்,  அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது நிர்வாகத்தின் பொறுப்பு. இதுபோன்ற உத்தரவுகளால் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் அச்சமடைய வாய்ப்புள்ளது' என்று கூறுகிறார் பெண்கள் நல ஆர்வலர் ஷபனம் பாண்டே. மேலும், சமூக வலைதளங்களிலும் இது குறித்த விவாதங்கள் கிளம்பியுள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close