Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோஷேவின் அன்பினால் நெகிழ்ந்த மோடி

பிரதமர் மோடி மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்றிருக்கிறார். மோடி இஸ்ரேல் சென்றதிலிருந்தே அந்நாட்டினர் மிகுந்த உற்சாகத்தோடு அவரை வரவேற்றுக்கொண்டிருக்கிறார்கள். 

மோடி

இந்நிலையில் மோடி, மோஷே என்ற சிறுவனை சந்தித்தார். அந்த சிறுவன் மோடியை அன்போடு வரவேற்று, “நான் உங்கள் மீதும் இந்திய மக்கள் மீதும் அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறேன்” என்றதும் பிரதமர் மோடி, “நீ எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு வரலாம். உனக்கு நீண்டகால விசா உண்டு” என்று சொல்லியிருக்கிறார். சிறுவன் மோஷே மகிழ்ச்சியோடு “இந்தியப் பிரதமர் என்னை இந்தியாவுக்கு அழைத்திருக்கிறார். நான் நிச்சயம் இந்தியா செல்வேன்” என்றான். 

இந்தச்சிறுவன் இஸ்ரேல் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு குடும்பத்தோடு வந்தவன். கடந்த 2008-ம் ஆண்டு மும்பை யூத மையத்தின் மீது நடந்த தீவிரவாதத் தாக்குதலில் பெற்றோரை இழந்தவன். அவனை இந்திய செவிலியர் ஒருவர்தான் காப்பாற்றியிருக்கிறார். அவரை இஸ்ரேல் நாடு பாராட்டி கௌரவிக்க செவிலியரான சாண்டாவும் அந்தச்சிறுவனோடு இஸ்ரேலிலேயே தங்கிவிட்டார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close