Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''பாதுகாக்கும் பிரிவுகள் ஏதுமின்றிச் சட்டப்பிரிவு நடைமுறைப்படுத்தப்படுகிறது!'' - தேசிய மாநாட்டுக் கட்சி 

ஜம்மு -காஷ்மீர்''பாதுகாக்கும் பிரிவுகள் ஏதுமின்றிச் சட்டப்பிரிவு நடைமுறைப்படுத்தப்படுகிறது'' என ஜம்மு - காஷ்மீரில் ஜி.எஸ்.டி-க்குத் தீர்மானம் நிறைவேற்றியது தொடர்பாகத் தேசிய மாநாட்டுக் கட்சி கருத்துத் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு, கடந்த ஜூலை ஒன்றாம் தேதி ஜி.எஸ்.டி வரியை நாடு முழுவதும் அமல்படுத்தியது. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களும் தங்களது சட்டசபையில் ஜி.எஸ்.டி மசோதாவுக்கான தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றின. அதேபோல், நேற்று ஜம்மு -காஷ்மீர் மாநிலத்திலும் ஜி.எஸ்.டி வரிக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, எதிர்க் கட்சியினர் ஜி.எஸ்.டி தீர்மானத்துக்கு எதிராகக் கோஷம் எழுப்பியதுடன், கடும் அமளியிலும் ஈடுபட்டனர்.
இதுகுறித்துப் பேசிய தேசிய மாநாட்டுக் கட்சி பேரவை உறுப்பினரான அலி முகம்மது சாகர், ''இந்திய அரசியல் சட்டப்பிரிவான 101-ஐ திருத்தம் செய்து அமல் செய்வதன் மூலம், அரசு தனிச் சிறப்பான 370 சட்டத்தை மெதுவாக நீக்கம் செய்யவே பயன்படும்'' என்றார். அந்தக் கட்சியின் மற்றோர் உறுப்பினரான தேவிந்தர் சிங் ராணா, ''போதுமான பாதுகாக்கும் பிரிவுகள் ஏதுமின்றிச் சட்டப்பிரிவு 101 நேரடியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது, காஷ்மீர் சட்டப்பேரவை வரலாற்றின் இருண்ட நேரம். அடுத்தகட்ட நடவடிக்கையாகக் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தின் மீது நடத்தப்படும் தாக்குதலை எதிர்கொள்ள திட்டங்கள் வகுக்கக் கட்சி கூடிப் பேசும்'' என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close