Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

550 கோடி ரூபாய் காசோலை உண்மையில்லை என்றால்... சுப்ரதா ராய்க்கு எச்சரிக்கை விடுத்த உச்ச நீதிமன்றம்..!

செபி-சஹாரா கணக்கில் சுப்ரதா ராய் 710 கோடி ரூபாய் செலுத்தியுள்ளார் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


சஹாரா நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்குப் பணத்தைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்த வழக்கில் சுப்ரதா ராய் 2014-ம் கைது செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகள் வரை சிறையிலிருந்த அவர் 2016-ம் ஆண்டு பரோலில் வெளிவந்தார். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. `சுப்ரதா ராய் 1,500 கோடி ரூபாயை செபி வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஏற்கெனவே, 790 கோடி ரூபாய் செலுத்தப்பட்டதாக சுப்ரதா ராய் வழக்கறிஞர் தெரிவித்திருந்த நிலையில், மேலும், 710 கோடி ரூபாய் செலுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியிருந்தது. இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சஹாரா நிறுவனம் 710 கோடி ரூபாய் செலுத்தியுள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், சஹாரா நிறுவனம் வழங்கியுள்ள 550 கோடி ரூபாய்க்கான காசோலை உண்மையானதாக இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும். ஜூலை 15-ம் தேதிக்குள் காசோலையின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close