Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜிஎஸ்டி நிறைவேற்றத்துக்கு ஓமர் அப்துல்லா கண்டனம்..!

'ஜம்மு-காஷ்மீரில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது அவமானகரமானது' என்று ஓமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். 


ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள ஜிஎஸ்டி மசோதா, முன்னதாகவே பா.ஜ.க. அரசால் மாநிலங்களவை மற்றும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த மசோதா, ஒவ்வொரு மாநிலங்களிலும் நிறைவேற்றப்படவேண்டிய தேவை உள்ளது. தமிழ்நாடு உள்பட, பெரும்பான்மையான மாநிலங்கள் இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளன. நேற்று, காஷ்மீர் சட்டமன்றத்தில் ஜிஎஸ்டி மசோதா காங்கிரஸ் மற்றும் காஷ்மீர் மாநாட்டுக் கட்சியின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா, 'காஷ்மீருக்கான அரசியல் சாசன பாதுகாப்பு குறித்து இந்த மசோதாவில் எதுவும் விளக்கப்படவில்லை. ஜம்மு-காஷ்மீரை ஆளும் பா.ஜ.க. மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சிகள் மத்திய அரசுக்கு சாதகமாக, அவமானகரமான ஜிஎஸ்டி-யை நிறைவேற்றியுள்ளன. இது, மாநிலத்துக்கான சிறப்பு அதிகாரங்களைப் பறிக்கக்கூடியது' என்று பதிவிட்டுள்ளார்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close