Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்கள்...' பா.ஜ.க. கோரிக்கை!

'மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை உடனடியாக அமல்படுத்திட வேண்டும்' என்று மாநில பா.ஜ.க. தலைவர் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். 

மேற்கு வங்க கலவரம்

கடந்த 4-ம் தேதி, மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாதுரியா என்ற பகுதியில், மதக்கலவரம் வெடித்தது. ஃபேஸ்புக்கில் குறிப்பிட்ட ஒரு மதத்தைப் பற்றி இழிவாகப் பதிவிட்டதையடுத்து, அங்கு இரு தரப்பினரிடையே கலவரம் உருவாகியது. இதையடுத்து, பல்வேறு தீ வைப்புச் சம்பவங்கள் அங்கு அரங்கேறின. மேலும், அங்குள்ள காவல் நிலையமும் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து, ஆளுநரின் உத்தரவின் பேரில், அங்கு மத்திய துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

கலவரம் நடந்த பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும், சமூக ஊடகங்கள்மூலம் வதந்திகள் பரவாமல் தடுக்க, இன்டர்நெட் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, கலவரம் ஏற்பட்ட விவகாரத்தில், மேற்கு வங்க ஆளுநர் திரிபாதி, தன்னை மிரட்டி அவமானப்படுத்தியதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார், மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி. மேலும், ஆளுநர் போல அல்லாமல், பா.ஜ.க. மாவட்டத் தலைவர்போல அவர் பேசினார் என்று மம்தா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, மேற்கு வங்கத்தின் பா.ஜ.க. மாநிலத் தலைவர் திலிப் கோஷ், 'மத்திய அரசு மேற்கு வங்கத்தில் இப்போது அரங்கேறிவரும் பிரச்னையில் உடனே தலையிட்டு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்திட வேண்டும்' என்று கோரிக்கை வைக்கிறேன். கலவரம் நடந்து வரும் பகுதியில், இந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டன. ஆனால், போலீஸ்  இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. மாநில ஆளுநர்தான் பிரச்னையில் தலையிட்டு, மத்திய துணை ராணுவப் படையை வர வைத்தார். 'ஜிஹாதிகளுக்கு மேற்கு வங்கம் மிகவும் பாதுகாப்பான இடமாக மாறிவருகிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்' என்று குற்றம் சாட்டியுள்ளார். 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close