Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதுநிலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

'கிராமங்களில் சேவையாற்றிய அரசு மருத்துவர்களுக்கு, சலுகை மதிப்பெண் வழங்கும் அரசாணை செல்லும்' என்று கூறி உச்ச நீதிமன்றம் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கையை நடத்த தமிழக அரசுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்

இந்திய மருத்துவ கவுன்சில், பணி அடிப்படையில் வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண் வழங்கும் முறையில் மாற்றத்தைக் கொண்டுவந்தது. அதன்படி, 'பழங்குடியினர் வாழும் பகுதிகள், மலைப்பகுதி மற்றும் போக்குவரத்து வசதியில்லாத தொலைதூரப் பகுதி ஆகிய மூன்று பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மட்டுமே கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும்' என வரையறுத்தது.

இதனடிப்படையில், தமிழகத்தில் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. இந்த விவகாரத்தில், தமிழக அரசின் அரசாணைக்கு எதிராகத் தனியார் மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், அரசாணையை ரத்துசெய்த நீதிமன்றம், இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்தது. அந்த வழக்கில்தான் நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், 'கிராமங்களில் சேவையாற்றிய அரசு மருத்துவர்களுக்கு, சலுகை மதிப்பெண் வழங்கிய அரசாணை செல்லும்' என்று கூறி, தமிழக அரசுக்கு 'மாணவர் சேர்க்கையை நடத்தலாம்' என்றும் அனுமதியளித்துள்ளது. 


 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close