Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

துணை ஜனாதிபதி தேர்தல்... எதிர்க்கட்சிகளுடன் மீண்டும் இணையும் நிதிஷ் குமார்!

துணை ஜனாதிபதி தேர்தல் குறித்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நிதிஷ் குமார்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 17-ம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் பதவிக்காலமும் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைவதால், அதற்கான தேர்தலும் நடைபெறவுள்ளது. இதன் வேட்பு மனுக்கள் ஜூலை 4ல் இருந்து 18-ம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து ஆகஸ்ட் 5-ம் தேதி துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனிடையே, துணை ஜனாதிபதி தேர்தல் குறித்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதாக அறிவித்தது, எதிர்க்கட்சிகளில் அங்கம் வகிக்கும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம். இதனால், நிதிஷ்குமாருடனான எதிர்க்கட்சிகளின் உறவில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து விவாதிக்க நிதிஷ் குமாருக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளது. பா.ஜ.க-வின் சார்பில் வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close