Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடியின் இஸ்ரேல் பயணத்தின் விளைவு இதுதான்... கொதிக்கும் பிரகாஷ் காரத்!

மோடியின் இஸ்ரேல் பயணத்தால், பாலஸ்தீனுடன் இந்தியா கொண்டிருந்த ஆதரவு நிலைப்பாடு முடிந்துள்ளது என்று கூறியுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிரகாஷ் காரத்.

Prakash Karat on Modi's Israel Visit

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனுக்கும் இடையில் நீண்ட காலமாகவே பிரச்னை நீடித்து வருகிறது. இஸ்ரேல் யூதர்களுக்கும் பாலஸ்தீன இஸ்லாமியர்களுக்கும் நடந்த போரில், பல்வேறு உயிரிழப்புச் சம்பவங்கள் அங்கு நடந்துள்ளன. இதனிடையே, இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியா இதுவரை பாஸ்தீனத்தை ஆதரித்து வந்தது. இது ஒருபுறம் இருக்க, இதுவரை இந்திய பிரதமர்கள் இஸ்ரேல் செல்வதைத் தவிர்த்து வந்த நிலையில், பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றது விவாதங்களைக் கிளப்பியுள்ளது. 

இந்நிலையில், மோடியின் இஸ்ரேல் பயணத்தால், பாலஸ்தீனுடன் கொண்டிருந்த ஆதரவு நிலைப்பாடு முறிந்துள்ளது என்று விமர்சித்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத். இதுகுறித்து பேசிய அவர், 'பாலஸ்தீனுக்குச் செல்லாமல் இஸ்ரேலுக்கு மட்டும் சென்றதன் மூலம் பாலஸ்தீனை இனி இந்தியா ஆதரிக்காது என்று தெரியவந்துள்ளது. இதுதான் இஸ்லாமியர்களுக்கு எதிரான பா.ஜ.கவின் அணுகுமுறை' என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close