Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மூன்று நாள்களுக்குள் தகவல் அளிக்க வேண்டும்..! ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!


'இணைய முறைகேடுகளால் பணத்தை இழக்கும் வாடிக்கையாளர்கள், மூன்று நாள்களுக்குள் வங்கியில் புகார் அளித்தால், அவர்களது வங்கிக் கணக்கில் பணம் திரும்பச் செலுத்தப்படும்' என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய அரசு மின்னணு பணப் பரிமாற்றத்துக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறது. அதேநேரத்தில், இணையம்மூலம் பணத்தை ஏமாற்றுவதும் பெருகிவருகிறது. ஆன்லைன்மூலம் பணத்தை இழந்தால், பணத்தைத் திரும்பப் பெறுவது மிகுந்த சிரமமாக இருந்து வருகிறது. இதுகுறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில், 'வங்கிகளின் பங்களிப்பு, பற்றாக்குறை, அலட்சியம் ஆகியவற்றால் பணத்தை இழந்தால், வங்கிகள் அந்தப் பணத்தைத் திரும்ப அளிக்கும்.

மற்றவர்களுக்கு ஆன்லைன்மூலம் பணம் செலுத்தும்போது இழப்பு ஏற்பட்டால், மூன்று நாளைக்குள் வங்கிகளில் தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போது, முழுப் பணம் பிடித்தம் இல்லாமல் 10 நாள்களுக்குள் திரும்பச் செலுத்தப்படும். பண இழப்பு ஏற்பட்டு 4-7 நாள்களில் தகவல் தெரிவித்தால், 25,000 பிடித்தம் செய்யப்படும். ஏழு நாள்களுக்குப் பின்னர் வங்கியில் தகவல் தெரிவித்தால், பணம் பிடித்தம் செய்ய வேண்டிய அளவை வங்கிகளே தீர்மானிக்கும்' என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close