Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆன்லைன் பேமென்ட் மோசடிக்கு இனி வாடிக்கையாளர்கள் பொறுப்பில்லை! ஆர்.பி.ஐ அறிவிப்பு

வாடிக்கையாளர்

வாடிக்கையாளருக்கே தெரியாமல் அவர்களது வங்கிக் கணக்கில் நடக்கும் பரிவர்த்தனைகளை 3 நாள்களுக்குள் அவர்கள் வங்கியிடம் புகார் தெரிவித்தால், அந்தப் பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் பொறுப்பு ஆக மாட்டார்கள் என அறிவித்திருக்கிறது ஆர்.பி.ஐ.

”Zero Liability" மர்றும் “Limited liability" என இரண்டு விஷயங்களை ரிசர்வ் வங்கி தெளிவுப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் ஆன்லைனில் நடக்கும் மோசடிகள் களைந்து, இணையப் பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்களுக்கு ஆபத்தில்லாத ஒன்றாக மாறும் என எதிர்பார்க்கலாம். ரிசர்வ் வங்கியின் இந்தப் புதிய அறிவிப்பின்படி, அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் SMS அலெர்ட்டை உடனடியாக ஆக்டிவேட் செய்துகொள்ள வேண்டும். 

இப்போது உள்ள நடைமுறையில் பல ஆன்லைன் மோசடிகள் நடக்கின்றன. இதற்கு வாடிக்கையாளரோ, வங்கிகளோ காரணமாக இருப்பதில்லை. இடையில் இருக்கும் சிஸ்டமோ, அல்லது குறுக்குவழியில் மோசடி செய்பவர்களோதான் காரணம். இதன் மொத்த பழியையும் இப்போதைக்கு வாடிக்கையாளரே சுமக்கிறார். இதைத்தான் ரிசர்வ் வங்கி இப்போது தளர்த்தியிருக்கிறது. 

நமக்குத் தெரியாமல் யாரோ நமது கார்டை இணையத்தில் பயன்படுத்தி ஏதேனும் வாங்கியிருந்தால், அது பற்றிய தகவல்கள் நமக்கு உடனடியாக SMS மூலம் வரும். அது நாம் செய்த பரிவர்த்தனையாக இல்லாமல் இருந்தால், உடனடியாக அந்த வங்கிக்கு அழைத்துத் தகவல் தெரிவிக்க வேண்டும். 3 நாள்களுக்கும் இதைச் செய்தால், அந்தப் பணத்தை வாடிக்கையாளர் கட்ட வேண்டியிருக்காது. இதுதான் Zero Liability. 7 நாள்களுக்குள் செய்தால், அதிகபட்சமாக 25000 ரூபாய் வரை வாடிக்கையாளர் கட்ட நேரிடலாம் என்கிறது ரிசர்வ் வங்கி. இது Limited liability. ”இப்படி நடக்கும் மோசடியான பரிவர்த்தனைகள் பற்றிய வாடிக்கையாளர் புகார்கள் சமீபகாலமாக அதிகமாக பதிவாகியிருக்கிறது. அதைக் கணக்கில் கொண்டே இந்த மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறோம்” என ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.

இது ஆன்லைன் டிரான்ஸாக்‌ஷனுக்கு மட்டும் இல்லாமல், நேரிடையாக நடக்கும் எலக்ட்ரானிக் டிரான்சாக்‌ஷனுக்கும் பொருந்தும். வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை எளிமையாக பதிவு செய்ய உதவும் விதத்தில் அனைத்து வங்கிகளும் தங்களது இணையதளத்தின் முகப்புப் பக்கத்திலே புகார் செய்ய வசதி செய்யும்படியும் ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டிருக்கிறது.

இணையதளம் தவிர SMS, மொபைல் பேங்கிங், கால் செண்டருக்கு அழைப்பது மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் தங்களது புகாரைத் தெரிவிக்கலாம். சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதமே இது பற்றிய ஒரு வரைவு அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்தது. இந்த ஆண்டு அதை அமல்படுத்தியிருக்கிறது.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு நல்லது என எடுத்துக்கொண்டாலும், அவர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். இணையம் மூலம் பேங்கிங் செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து இயங்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.

ஆன்லைன் பேங்கிங்... பாதுகாப்பாய் இருக்க உதவும் சில டிப்ஸ்.

URL

உங்கள் வங்கிக்கணக்கை எந்த இணையதள முகவரி மூலம் பயன்படுத்துகிறீர்கள் என்பதை கவனியுங்கள். சரியான முகவரியை புக்மார்க் செய்து அது மூலமாக மட்டுமே உள்ளே நுழையுங்கள். கூகுள் செய்து, அதில் வரும் லிங்க்  மூலம் லாக் இன் செய்யாதீர்கள்.

இரண்டு அடுக்கு பாதுகாப்பு (two factor authentication)

லாக் இன் ஐடி மற்றும் பாஸ்வேர்டு இருந்தால்தான் ஆன்லைன் அக்கவுன்ட்டுக்குள் நுழைய முடியும். பாஸ்வேர்டு மட்டுமே இல்லாமல், கூடுதலாக இன்னொரு லேயர் பாதுகாப்பையும் சேர்ப்பதுதான் two factor authentication. பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP கிடைக்கும்படி செய்வதன் மூலம் இந்தப் பாதுகாப்பை உறுதிச் செய்யலாம். ஒருவேளை நம் பாஸ்வேர்டை யாராவது தெரிந்துகொண்டாலும் இந்த OTP இல்லாமல் நுழையவே முடியாது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close