Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாடு முழுவதும் உள்ள அனைத்து ஐஐடி-க்களிலும் மாணவர் சேர்க்கைக்குத் தடை!

நாடு முழுவதும் உள்ள அனைத்து ஐஐடி கல்வி நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். நடந்து முடிந்த ஐஐடி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வின்போது, இந்தி வினாத்தாளில் கேள்வி ஒன்று தவறாகக் கேட்கப்பட்டிருந்தது. இதற்காக அக்கேள்விக்கு பதிலளித்த அனைத்து மாணவர்களுக்கும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதற்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த பல்ராம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதன்மேல் விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் அனைத்து ஐஐடி கல்வி நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது, மேலும், கீழ் நீதிமன்றங்கள் ஐஐடி மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு தொடர்பான வழக்குகளை விசாரிக்க வேண்டாம் என்றும் உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும்வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை திங்களன்று நடைபெற இருக்கிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close