Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலியாகியுள்ளனர்.

இந்திய எல்லை

Representative image

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பூஞ்ச் பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இன்று காலை நடந்தேறிய இந்தத் திடீர் தாக்குதலால், கணவன்-மனைவி இருவரும் பலியாகினர். அந்தத் தம்பதியினரின் இரண்டு குழந்தைகளும் காயமடைந்து, தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இந்திய எல்லைப் பாதுகாப்பு வீரர்களுக்கும்  பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துவருகிறது.

இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்தத் தாக்குதலில், இந்திய வீரர்கள் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிகாரபூர்வமான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. முன்னதாக, நேற்று காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரர்கள் மீதும் அவர்கள் வாகனங்கள் மீதும் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், மூன்று வீரர்கள் காயமடைந்துள்ளனர். இதனால், தற்போது எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close