Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'காஷ்மீர் பிரச்னைக்கு எப்படித் தீர்வு காண்பது?' காங்கிரஸ் கருத்து!

'காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண, பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் ஐயர் கருத்து தெரிவித்துள்ளார்.

காஷ்மீர்

காஷ்மீரில், கடந்த ஆண்டு ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து, கடந்த ஓராண்டாக, காஷ்மீரில் அசாதாரண சூழல் நீடித்துவருகிறது.  புர்ஹான் வானியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நேற்று காங்கிரஸ் தலைவர் சைஃபுதீன், 'புர்ஹான் வானியைக் கொல்லாமல் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம்' என்று கருத்து தெரிவித்து பரபரப்பைக் கிளப்பினார்.

இந்நிலையில், 'காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண, பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் ஐயர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 'துப்பாக்கி முனையில் காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது. அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்குப் பதிலாக, அங்குள்ள மக்களிடம் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், காஷ்மீரைச் சேர்ந்த சைஃபுதீனுக்கு அங்குள்ள சூழ்நிலை தெளிவாகத் தெரிந்தே, அவர் புர்ஹான் வானி பற்றிப் பேசினார்' என்று மணி சங்கர் ஐயர் கூறியுள்ளார்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close