Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இந்தியாவில் கவனமா இருங்க...' தங்கள் நாட்டு மக்களை எச்சரிக்கும் சீனா!

சிக்கிம் மாநில எல்லையில், இந்தியா-சீனா-பூட்டான் நாடுகளின் எல்லைகள் ஒன்று சேரும் டோகாலா பகுதியை ஆக்கிரமித்த சீனா, சாலை அமைக்கும் பணியை ஆரம்பித்தது. சீனா தொடங்கிய பணிகளை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சீனா, இந்தியா அமைத்திருந்த இரண்டு பதுங்குகுழிகளை அழித்தது. சீனாவின் இந்தச் செயலைக் கண்டித்த இந்தியா, எல்லையில் 3,000 வீரர்களைக் குவித்தது. 

China

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த சீனா, இந்திய ராணுவத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறும், இல்லையேல் ராணுவ நடவடிக்கை எடுப்போம் எனவும் எச்சரித்துள்ளது. இதனால், இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் போர்ப் பதற்றம் தொடர்ந்து நீடித்துவருகிறது. இந்நிலையில், இந்தியாவில் இருக்கும் சீனப் பயணிகள் மற்றும் இந்தியாவுக்குச்  செல்லும் சீனப் பயணிகளுக்கு, அந்நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்தியாவில் உள்ள சீனத் தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கையில், "இந்தியாவில் கவனமாக இருக்கும் சீனர்கள், அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும். வெளியில் செல்லும்போது, தங்களது அடையாள அட்டைகளை வைத்துக்கொள்ளவும். வெளியில் செல்லும் உறவினர்கள், நண்பர்களுக்கு இந்தத் தகவலை உடனடியாகத் தெரிவிக்கவும். குறிப்பாக, இந்தியாவில் உள்ள சட்ட விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். அங்குள்ள உள்ளூர்வாசிகளிடம் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close