Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மேற்கு வங்கக் கலவரம்... மத்திய அரசை குற்றம் சாட்டும் மம்தா!

'மேற்கு வங்கத்தில் தொடரும் வன்முறைச் சம்பவங்களுக்கு மத்திய அரசே காரணம்' என்று கூறியுள்ளார் மம்தா பானர்ஜி.

மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில், நீண்ட காலமாகவே தனி மாநில கோரிக்கையை வைத்துவருகின்றனர் கூர்க்கா இன மக்கள். கடந்த மாதம் முதல்வர் மம்தா பானர்ஜி, 'அனைத்துப் பள்ளிகளிலும் வங்க மொழி கட்டாயம்' என்று அறிவித்ததையடுத்து, அங்கு போராட்டம் தீவிரமடைந்தது. மேலும், கடந்த 4-ம் தேதி, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாதுரியா என்ற பகுதியில், மதக் கலவரம் வெடித்தது. ஃபேஸ்புக்கில், குறிப்பிட்ட ஒரு மதத்தைப் பற்றி இழிவாகப் பதிவிட்டதையடுத்து, அங்கு இரு தரப்பினரிடையே கலவரம் உருவானது. 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, 'மேற்கு வங்கத்தில் தொடரும் வன்முறைச் சம்பவங்களுக்கு, மத்திய அரசே காரணம்' என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர், 'மத்திய அரசிடம் ஒன்றுபடும் மனோபாவம் இல்லை. வெளிநாட்டு சதிக் கும்பல்களிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் பா.ஜ.க., இங்கு தொடர்ந்து பதற்றமான சூழலை ஏற்படுத்திவருகிறது. டார்ஜிலிங் மக்கள் வன்முறையில் ஈடுபடாமல், அமைதியை நிலைநாட்ட வேண்டும்' என்று அவர் கூறியுள்ளார். மேலும், 'பாதுரியா மாவட்டத்தில் நடந்த கலவரம்குறித்து நீதி விசாரணை மேற்கொள்ளப்படும்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close