Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“ராம்நாத் கோவிந்த் நல்ல மனிதர்!'' - மீராகுமார்

மீராகுமார்

“ராம்நாத் கோவிந்த் நல்ல மனிதர்'' என எதிர்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் மீராகுமார் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 17-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அதன் வேட்பாளர்கள் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று ஆதரவு கோரி வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் மீராகுமார் நேற்று ராஞ்சிக்குச் சென்றார். அங்கு, “ராம்நாத் கோவிந்த் நல்ல மனிதர்தான். ஆனால், எனது போட்டி அவருக்கு எதிரானது அல்ல; அது சித்தாந்த ரீதியிலானது” என்று கூறினார் மீராகுமார்.

ராஞ்சியில் அவர் முக்கிய எதிர்க் கட்சித் தலைவர்களைச் சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்கும்படி கோரினார். “இந்தத் தேர்தல், கட்சி உத்தரவுபடி வாக்களிக்கிற தேர்தல் அல்ல என்பதால், உறுப்பினர்கள் தங்களது மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்” என்றார். பின்னர், அவர் ஜே.எம்.எம் கட்சியின் தலைவர் ஷிபுசோரன் மற்றும் அவரது மகன் ஹேமந்த் சோரன் ஆகியோரைத் தனித்தனியே அவர்களது இல்லங்களில் சந்தித்தார். அப்போது காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் உடனிருந்தனர். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close