Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஜி-20 நாடுகள் முன்வர வேண்டும்!'' - பிரதமர் மோடி

மோடி

''இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஜி-20 நாடுகள் முன்வர வேண்டும்'' என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

ஜி-20 மாநாட்டின் இறுதி நாளான நேற்று, பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது இதை வலியுறுத்தியுள்ளார். மாநாட்டில் அவர் பேசியதாவது, ''வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஜி-20 நாடுகள் முன்வர வேண்டும். அதுதான், வேலை வழங்கும் நாட்டுக்கும் நல்லது, அந்த இளைஞர்களின் நாட்டுக்கும் நல்லது. வேலைவாய்ப்பு மூலம் வளர்ச்சியும் பெருகும். தொழிலாளர் சந்தையை வலுப்படுத்த டிஜிட்டல் மயமாக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் அளிக்காமல், உண்மையான வளர்ச்சியை எட்ட முடியாது. யோகா பயிற்சியின் மூலம், நோய்களை வரவிடாமல் தடுக்க முடியும்'' என்றார்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close