Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஷ்மீரில் முடக்கப்பட்ட இணையசேவை மீண்டும் தொடங்கியது!

காஷ்மீரில் நிலவிய பதற்றமான சூழல் காரணமாக சில நேற்று முடக்கப்பட்டிருந்த இணையசேவை, தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

காஷ்மீர்

ஹிஜ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபதியான புர்ஹான் வானியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று காஷ்மீரில் அனுசரிக்கப்பட்டது. இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ம் தேதி இந்திய பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால் போரட்டங்கள் நடைபெறாலாம் என்றும் வன்முறைச் சம்பவங்கள் வெடிக்கலாம் என்றும் ராணுவப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மேலும், அண்மைக் காலமாக காவல் படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதற்கான முக்கியக் காரணமே சமூக வலைதளங்கள் தான் என்ற கூற்று பரவலாக நிலவி வருகிறது.

இதையடுத்து, நேற்று ஜம்மு காஷ்மீரில், குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இணையசேவை துண்டிக்கப்படது. தற்போது, முடக்கப்பட்டிருந்த இணையசேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக செல்போன் இணையசேவை மட்டும் தொடங்கப்பட்டுள்ளது. இன்றைய அமைதியை நிலையை ஆராய்ந்த பின்னர் அதிவேக இணையதளசேவை மற்றும் அகன்ற அலை வரிசை சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close