Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கலவரம் குறித்து பாரபட்சமற்ற விசாரணைக்கு ஆணையிடப்படும்!'- பா.ஜ.க-வுக்கு கிடுக்குப்பிடி போடும் மம்தா

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.

மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் கடந்த சில நாள்களாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. டார்ஜிலிங்கில் உள்ள கூர்க்கா இன மக்கள் தனி மாநில உரிமை கோரி போராடி கொண்டிருப்பதால், அங்கு தொடர்ந்து வன்முறை சம்பவங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த 4-ம் தேதி, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாதுரியா என்ற பகுதியில், மதக் கலவரம் வெடித்தது. ஃபேஸ்புக்கில், குறிப்பிட்ட ஒரு மதத்தைப் பற்றி இழிவாகப் பதிவிட்டதையடுத்து, அங்கு இரு தரப்பினரிடையே கலவரம் உருவானதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் மாநிலத்தின் சில பகுதிகளில் அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது. மேலும் பா.ஜ.க-வினர், 'மம்தா பானர்ஜியால் அமைதியான ஆட்சியை கொடுக்க முடியவில்லை. எனவே குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்' என்று கூறி வருகின்றனர். 

இதையடுத்துதான் மம்தா, 'பாதுரியா பகுதியில் நடந்து வரும் கலவரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். யாரெல்லாம் இந்தக் கலவரத்தின் பின்னணியில் இருந்தார்கள் என்பதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அதற்கான பதிலை கண்டுபிடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு செய்யும். மாத்திய அரசு, நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை அழிப்பதில் மிகவும் முனைப்போடு இருக்கிறது. மாநிலத்தில் அவர்கள் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்பதில் மட்டும்தான் அவர்களின் கவனம் இருக்கிறது. மேற்கு வங்கத்தின் அமைதியைக் குலைப்பதே பா.ஜ.க-வின் குறிக்கோளாக உள்ளது' என்று மத்திய அரசு மீது அடுக்கடுக்காக குற்றம் சுமத்தியுள்ளார். 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close