Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சீனத் தூதரக அதிகாரியுடன் ராகுல் காந்தி திடீர் சந்திப்பு!

இந்தியாவுக்கான சீனத் தூதரக அதிகாரி லூ சவோஹூயை ராகுல் காந்தி திடீரெனச் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பைக் காங்கிரஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

எல்லைப் பிரச்னைத் தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த ஒரு மாத காலமாகப் பிரச்னை நிலவி வருகிறது. இந்தப் பிரச்னை தொடர்பாக சீனா, இந்தியாவுக்குத் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்துவருகிறது. சீன விவகாரத்தில் ஏன் பிரதமர் அமைதியாக இருக்கிறார் என்று ஏற்கெனவே ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார். இந்தச் சூழலில் சீன வெளியுறவுத் துறை இணையதளத்தில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவுக்கான தங்கள் நாட்டு தூதரக அதிகாரி லூ சவோஹூயை ஜூலை 8-ம் தேதி சந்தித்துப் பேசினார். அவர்கள் எல்லைப் பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தினர்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ராகுல் காந்தியின் சீனத் தூதரக அதிகாரியுடனான சந்திப்பைக் காங்கிரஸ் மறுத்துவந்தது.

இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.க, ராகுல் காந்திக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தது. இதனிடையே ராகுல் காந்தியுடனான சந்திப்புக் குறித்த பதிவு சீன வெளியுறவுத் துறை இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரஞ்சித்சிங் சுர்ஜிவாலா கூறுகையில், 'சீனத் தூதரக அதிகாரி மட்டுமில்லாது பூடான் தூதரக அதிகாரியையும் ராகுல் காந்தி சந்தித்தார். இதைப் பெரிய விவகாரமாக்க வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close