Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பசு மீது மோதிய கார்..! கண்டுகொள்ளாத அமித்ஷா

அமித் ஷா

னைத்து மாநிலங்களிலும் தங்களது கட்சியின் பலத்தை அதிகப்படுத்தும் வகையில் பயணம் மேற்கொண்டுள்ளார் பா.ஜ.க தலைவர் அமித்ஷா. அந்த வகையில் மூன்று நாள் பயணமாக ஒடிசா மாநிலத்துக்குச் சென்றுள்ளார். இரண்டாம் நாளான நேற்று அங்குள்ள ஜஜ்பூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது அமித்ஷாவின் கார் சாலையில் நின்றுகொண்டிருந்த பசுவின் மீது மோதியது.

இதில் பசு பலத்த காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. அமித்ஷா வந்த காரிலும் சிறிது சேதம் ஏற்பட்டுள்ளது. காரில் உடன் வந்த நிலகிரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பிரதாப் சந்திர சாரங்கி காரிலிருந்து இறங்கி உடன் வந்த கட்சியின் மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து காயமடைந்த பசுவுக்கு சிகிச்சை ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கியுள்ளார். ஆனால், அமித்ஷாவின் கார் பசுவுக்கு என்ன ஆனது என்று கூட கவனிக்காமல் அங்கிருந்து நகர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. நாடுமுழுவதும் பசுப் பாதுகாப்பு பற்றி பறைசாற்றிக் கொண்டிருப்பவர்களே இப்படி நடந்துகொள்ளலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர் ஒடிசாவின் மற்ற கட்சியினர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close