Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிகை கடத்தல் முதல் திலீப் கைது வரை என்ன நடந்தது?

நடிகை கடத்தல் வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டிருக்கிறார். பிப்ரவரி 17 முதல் ஜூலை 10 வரை நடந்த சம்பவங்கள் இவைதான்! 

பிப்ரவரி 17; அதானி என்ற இடத்தில் மலையாள நடிகை காரில் சென்றுகொண்டிருந்தபோது அவரைக் கடத்த முயற்சி. இது குறித்து நடிகை அளித்த புகாரின் பேரில் அவரது கார் டிரைவர் மார்ட்டின் அந்தோணி கைது.

பிப்ரவரி 19; ஆழப்புழாவைச் சேர்ந்த வடிவேல் சலீம், கண்ணூரைச் சேர்ந்த பிரதீப் கைது. நடிகை கடத்தல் விவகாரத்தைக் கண்டித்து கொச்சியில் திரை உலகினர் கண்டனக் கூட்டம்.

பிப்ரவரி 20; தம்மனத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கைது. நடிகையைக் கடத்துவதற்காக கூலிப் படையினர் நியமிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

பிப்ரவரி 21; இந்த வழக்குத் தொடர்பாக மலையாள நடிகர் ஒருவரிடம் போலீஸார் வாக்குமூலம் பெற்றனர்.

பிப்ரவரி 22; போலீஸார் விசாரித்ததாக வந்த செய்தியை திலீப் மறுத்தார். குற்றப்பிண்ணனி உள்ளவர்களை நடிக்க அனுமதிக்க மாட்டோம் என்று சினிமா சங்கங்கள் அறிவித்தன.

பிப்ரவரி 23; முக்கிய குற்றவாளியான பல்சார், விஜினேஸ் இருவரையும் போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

நடிகர் திலீப்

பிப்ரவரி 24; நடிகை கடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோக்களைக் கொண்ட மொபைல் போனை போலீஸாரால் கைப்பற்ற முடியவில்லை. நடிகையைக் கடத்த 50 லட்சம் ரூபாய் கூலியாகப் பேசியதாக பல்சார் கூறினார்.

பிப்ரவரி 25; அந்த நடிகை, நான்கு குற்றவாளிகளை அடையாளம் காட்டினார். பல்சார், விஜினேஸ் இருவரும் மார்ச் 8-ம் தேதி வரை போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர்.

பிப்ரவரி 26; குற்றவாளிக்குச்சொந்தமான கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போனை கோயம்புத்தூரில் போலீஸார் கைப்பற்றினர்

பிப்ரவரி 27; நடிகை கடத்தல் வழக்கில் தொடர்புடையது என சொல்லப்படும் போலி வீடியோக்கள் குறித்து ஃபேஸ்புக் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

பிப்ரவரி 28; கொச்சி அருகே உள்ள போல்ஹாத்தி மேம்பாலத்துக்குக் கீழே மறைத்து வைக்கப்பட்டிருந்த பல்சாரின் மொபைல் போனை போலீஸார் கண்டுபிடித்தனர்.

மார்ச் 3; கைது செய்யப்பட்ட நான்கு பேரிடம் மேலும் விசாரணை செய்ய உள்ளதால் அவர்களின் போலீஸ் காவலை நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மார்ச் 19; பல்சாருக்கு நெருக்கமான பெண் ஒருவர் கைது  செய்யப்பட்டார்.

ஜூன் 24; மேலும் பல தகவல்கள் வெளியாயின. இயக்குநர் நதிர்ஷாவும், நடிகர் திலீப்பும் மிரட்டப்படுவதாக போலீஸாரிடம் கூறினர்.

ஜூன் 25; தன்னையும், தன் படங்களையும் குறிவைத்து இந்த முயற்சிகள் நடப்பதாக நடிகர் திலீப் குற்றம் சாட்டினார்.   

ஜூன் 26; போலீஸார் விஷ்ணு என்பவரைக் கைது செய்தனர். பல்சாருடன் சிறையில் ஒரே அறையில் தங்கி இருந்தவர், திலீப்பை மிரட்டிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார்.

ஜூன் 27; தன்னைப் பற்றி அவதூறான செய்திகள் பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகை கூறினார்.

ஜூன் 28; திலீப் மற்றும் நதீர்ஷா இருவரும் அலுவால் போலீஸ் கிளப்பில் வைத்து 13 மணி நேரம் போலீஸாரால் விசாரிக்கப்பட்டனர். ஆனால், இதனை திலீப் மறுத்தார்.

ஜூன் 29; மலையாள சினிமா உலகத்தைச் சேர்ந்தவர்களின் கூட்டம் நடந்தது.

ஜூலை 10; நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். நான்கு மாதங்களுக்குப் பின்னர் இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close