Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆதார் கார்டு சந்தேகங்களைப் போக்கும் மத்திய அரசின் புதிய புத்தகம்!

தார் கார்டு தொடர்பான பொதுமக்களின் சந்தேகங்களைப் போக்கும் வகையில், புதிய புத்தகம் ஒன்றை மத்திய அரசு தயாரித்துள்ளது.

ஆதார் அட்டை

அரசின் நலத்திட்டங்களைப் பெறுதல் மற்றும் பல்வேறு அத்தியாவசியத் தேவைகளுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான அடையாள அட்டையான ஆதார் கார்டை, மத்திய அரசு வழங்கியிருக்கிறது. 'ஆதார் அட்டை அனைவருக்கும் அவசியம்தானா? அரசு கட்டாயப்படுத்துவது சரிதானா?' எனப் பல கேள்விகள் எழுந்தாலும், அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டிருந்தாலும், அதைப் பயன்படுத்துவது குறித்த சந்தேகங்கள் இன்னும் முழுமையாகத் தீரவில்லை. 

எனவே, பொதுமக்களுக்கு எழும் சந்தேகங்களைப் போக்கும் வகையில், 'எ பயோமெட்ரிக் ஹிஸ்டரி' (A biometric history) என்ற பெயரில் புதிய புத்தகம் ஒன்றை மத்திய அரசு தயாரித்துள்ளது. இந்தப் புத்தகத்தில் ஆதார் திட்டம், அதைப் பயன்படுத்தும் முறைகள், பிரச்னைகளைச் சரிசெய்வது, பாதுகாப்பு மற்றும் தனியுரிமை சட்டங்கள் போன்ற பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இப்புத்தகம் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close