Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எதிர்க்கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தி!

gopalakrishna gandhi

எதிர்க்கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக, மகாத்மா காந்தியின் பேரனும் மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், எதிர்க்கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக, மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இரண்டு வேட்பாளர்களும் மாநிலம் முழுவது சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், துணை ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் கூட்டம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில், கோபாலகிருஷ்ண காந்தி துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மகாத்மா காந்தியின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தி, 2004-2009 வரை மேற்கு வங்க ஆளுநராகப் பதவி வகித்தார். 72 வயதான கோபாலகிருஷ்ண காந்தி, தற்போது துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, தேர்தலில் போட்டியிட கோபாலகிருஷ்ண காந்தியை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தயிருப்பதாகக் கூறப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close