Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிரைவர் சலீமால் காப்பாற்றப்பட்ட 50 அமர்நாத் யாத்ரீகர்கள்! 

மர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது தாக்குதல் நடத்தியதில் 7 பேர் பலியான நிலையில், துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கத் தொடங்கியதும் டிரைவர் பேருந்தை மின்னல் வேகத்தில் ஓட்டிச் சென்றதால் 50 பயணிகளின் உயிர் காப்பற்றப்பட்டுள்ள தகவல் தற்போது தெரியவந்துள்ளது. 

அமர்நாத் யாத்ரீகர்கள் உயிரை காப்பாற்றிய சலீம்

பேருந்தை ஓட்டிய குஜராத்தைச் சேர்ந்த சலீம் ஷேக், சம்பவம்  குறித்து கூறுகையில், ''இரவு 8.20 மணிக்குப் பேருந்தின் மீது குண்டுகள் பாயத் தொடங்கின. அந்த சமயத்தில் துரிதமாகச் செயல்பட்டு பேருந்தை வேகமாக ஓட்டிச் செல்லும் சக்தியைக் கடவுள் எனக்கு  அளித்தான். பாதுகாப்பான இடம் வரும் வரையில் பேருந்தை நான் நிறுத்தவே இல்லை'' என்றார்.

சலீமின் செயலை குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பாராட்டியுள்ளார். சலீமுக்கு வீரதீரச் செயலுக்கான விருது வழங்க பரிந்துரைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பலியானவர்களின் உடல்கள் குஜராத்துக்குக் கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது. 

பாகிஸ்தானைச் சேர்ந்த லஸ்கர் இ தொய்பா தீவிரவாதி இஸ்மாயில் அமர்நாத் தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி முனீர்கான் தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close