Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திலீப் கைது: ’வெல்கம் டு சென்ட்ரல் ஜெயில்’ என கோஷமிட்ட கேரளத்தினர்..!

ஆரம்ப காலத்தில் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக இருந்து மலையாள சினிமாவின் முன்னணி கதாநாயகனாக மாறியவர் திலீப். ஒருபுறம் நகைச்சுவை படங்களில் நடித்து வந்த திலீப், இன்னொரு புறம் ஆக் ஷன் ஹீரோவாகவும் மலையாள சினிமாவில் வலம் வந்தார். மலையாள சினிமா சங்கங்களில் ஈடுபாடு கொண்டு சங்கங்களுக்காகப் பல வேலைகளைச் செய்து வந்தார். மலையாள நடிகர் சங்கத்துக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது மலையாளத்தின் முன்னணி நடிகர், நடிகைகளை ஒரே படத்தில் நடிக்க வைத்து 'டுவென்டி டுவென்டி' என்ற படத்தைத் தயாரித்து அதில் கிடைத்த பணத்தை நடிகர் சங்கத்துக்குத் திலீப் வழங்கினார்.

அதனால் மலையாள நடிகர் சங்கங்களில் திலீப்புக்குத் தனி மரியாதை எப்போதும் உண்டு. அதன்பின்பு ரியல் எஸ்டேட் தொழில் பக்கம் திலீப் தனது கவனத்தைச் செலுத்தினார். தனது முதல் மனைவி மஞ்சுவாரியர், நடிகை பாவனா, காவ்யா மாதவன் ஆகியரோடு இணைந்து ரியல்எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அதனால் திலீப்புக்குப் பல சிக்கல்களும் உருவாயின. பல ரவுடிகளின் தொடர்பு ஏற்பட்டது. மஞ்சுவாரியரோடு திருமணம், விவாகரத்து, ரியல்எஸ்டேட் தொழில் மந்தம் எனப் பல பிரச்னைகள் திலீப்புக்கு நெருக்கடிகளைக் கொடுத்தன. நடிகை காவ்யா மாதவனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டது, திலீப்பின் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அதன்பின் நடிகை கடத்தல் வழக்கின் தொடக்கம் முதல் திலீப் பெயர் உச்சரிக்கப்பட்டு வந்தது. அதனால் திலீப்பின் ரசிகர்களும் கேரள மக்களும் பெரும் அதிர்ச்சியடைந்ததனர். அந்தக் குற்றச்சாட்டை நடிகர் திலீப் மறுத்து வந்தார். இப்போது நடிகை வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டு 14 நாள்கள் நீதிமன்ற காவலில் ஆலுவா சப் ஜெயிலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனால் திலீப்பின் திரையுலக வாழ்க்கை வீழ்ச்சியடைந்துள்ளது. மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வில் பொருளாளராக இருந்து வந்த திலீப்பை இன்று பதவியில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் நீக்கியுள்ளனர். திலீப் கடைசியாக மூன்று படங்களில் நடித்து வந்தார்.அதில் ஒரு படத்தின் ஷூட்டிங் முடிந்து திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. தற்போது  திலீப் கைது செய்யப்பட்டுள்ளதால் படம் எப்போது வெளியாகும் எனத் தெரியவில்லை. இரண்டு  படங்கள் இன்னும் பாதி படப்பிடிப்பு முடியாத நிலையில் திலீப் கைது செய்யப்பட்டுள்ளது, தயாரிப்பாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இன்று கோழிக்கோடு பஸ் நிலையம் அருகே திலீப்பின் உருவ பொம்மையை பாஜகவினர் எரித்துள்ளனர். திலீப் நடித்த 'வெல்கம் டு சென்ட்ரல் ஜெயில்' படம் கடந்த ஆண்டு வெளியாகி சுமாராகத்தான் ஓடியது. இன்று காலை ஆலுவா சப் ஜெயிலுக்குத் திலீப்பை போலீஸார் கொண்டு வரும்போது, ஜெயிலின் முன்பு நின்றவர்கள் ' வெல்கம் டு சென்ட்ரல் ஜெயில்' என கோஷங்களை எழுப்பினார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close