Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திலீப்புக்கு ஜாமீன் மறுப்பு! இரண்டு நாள் போலீஸ் காவல்

மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்புக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அவரை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

dileep


மலையாள நடிகை கடத்தல் வழக்கில் கார் டிரைவர் பல்சர் சுனி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் திலீப் ஜாமீன் கோரி அங்கமாலி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது திலீப் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். 

நீதிமன்றத்தில் இந்த மனுவுக்கு பதில் வாதம் செய்த காவல்துறை, 'இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்களை ஏற்கெனவே திலீப் அழிக்க முயற்சி செய்தார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் ஆதாரங்களை அழிக்க முயற்சிசெய்வார்' என்றனர். இதனால் திலீப்புக்கு ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்துவிட்டார்.

கேரள காவல் துறை, மூன்று நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரியிருந்த நிலையில் இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அங்கமாலி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து விசாரணைக்காக திலீப் அழைத்துச் செல்லப்பட்டார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close