Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிகர் திலீப்பின் ஹோட்டல், தியேட்டரை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்!

சினிமாவில் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வெற்றிபெற்றால் ஒரே இரவில் உலகப்புகழ் பெறவும் முடியும்; எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் கிரிமினல் வழக்கில் சிக்கினால் ஒரே நிமிடத்தில் அத்தனையையும் இழந்து அதலபாதாளத்துக்குள் போய்விடவும் முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார்  மலையாள நடிகர் திலீப். தயாரிப்பாளர், நடிகர், பாடகர்  எனப் பன்முகம்கொண்ட இவர் கைதான நிகழ்வை மம்முட்டியும் மோகன்லாலும் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கேரளாவில் இருக்கும் சினிமா பிரபலங்கள் சிலரிடம் திலீப் கைதுகுறித்து கேட்டோம். ''எங்களால் நம்பவே முடியவில்லை. இப்போதைக்கு கருத்து எதுவும் கூறும் நிலையில் நாங்கள் இல்லை'' என்றனர். 

திலீப் நடித்த இரண்டு படங்கள் தற்போது தயார் நிலையில் உள்ளன. இரண்டு படங்களுக்கும் இதுவரை ஆகியிருக்கும் செலவு 20 கோடி ரூபாய்க்கும் மேல். திலீப் திரையில் தோன்றும்போது பூக்களை வாரி இரைத்த அவரது ரசிகர்கள், இப்போது அவருக்குச் சொந்தமான தியேட்டரையும் ஹோட்டலையும் கல்வீசித் தாக்கியதோடு, அவற்றை உடைத்து துவம்சம் செய்துள்ளனர். 

திலீப்

கேரளாவில் உயர் பதவியில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள் பலர், திலீப்புக்கு மிக நெருக்கமானவர்கள். அப்படியிருந்தும் எப்படி கைதுசெய்யப்பட்டார் என்பது சினிமா வட்டார நண்பர்களுக்கு ஆச்சர்யமான சங்கதியாக உள்ளது.  நடிகையைக் கடத்துவதற்கு திலீப்தான் திட்டமிட்டார் என்பதற்கான வலுவான 19 காரணங்கள் இருந்ததால், திலீப்பை அவரது நட்பு காக்கிகளால் காப்பாற்ற முடியாமல்போனதாம். திலீப்பை, போலீஸ்  காவலில் 15 நாள்கள்  வைக்கச் சொல்லியிருப்பதால், இப்போதைக்கு உடனடியாக ஜாமீன் எடுக்க வழியில்லை. அதனால் பிரபலமான வழக்கறிஞர்களின் வீட்டுவாசலுக்கு நடந்துகொண்டிருக்கிறார் திலீப்பின் தம்பி.

வழக்கமாக வீட்டைவிட்டு வெளியே கிளம்பும்போது சகுனம் பார்ப்பதும், ரியல் எஸ்டேட் குறித்து முடிவெடுக்கும்போதும் சோழி உருட்டிப் பார்ப்பதும் திலீப்பின் வழக்கமாம். அந்த அளவுக்கு ஜாதக வெறியர். நடிகையைக் கடத்த கார் எடுத்துச் செல்வதற்கு முன் சகுனம் பார்த்தாரா. கடத்த தேதி குறித்தபோது சோழி உருட்டிப் பார்த்தாரா என்பது அவருக்குத்தான் தெரியும். பெற்றோரையும் உறவினரையும் வீட்டில் விட்டுவிட்டு சகநடிகர்கள் மீதான நம்பிக்கையில் படப்பிடிப்புக்கு வரும் நடிகையை, ஆள் வைத்துக் கடத்தியிருக்கும் திலீப்பின் செயல், மலையாள நடிகைகள் மத்தியில் கடுங்கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close