Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடுக்குமாடி குடியிருப்பைத் தாக்கிய கிராம மக்கள்... நொய்டாவில் பரபரப்பு!

நொய்டாவில், 'மகாகன் மாடர்ன்' என்ற அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. அங்குள்ள ஒரு தம்பதியின் வீட்டில், ஜோரா பிபி  என்ற ஒரு பெண் பணிபுரிந்துவருகிறார். பணிக்குச் சென்ற தனது மனைவி வீட்டுக்கு திரும்பவில்லை என்று ஜோராவின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

நொய்டா


குறிப்பாக, ஜோரா பணி செய்துவரும் வீட்டின் உரிமையாளர்களின் மீதுதான் சந்தேகம் இருப்பதாக அவர் தனது புகாரில் கூறியிருந்தார்.  இதனிடையே, ஜோராவின் கிராம மக்கள் நேற்று அந்த குடியிருப்பை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, அந்த குடியிருப்பின்மீது அவர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, குடியிருப்பில் பணிபுரியும் காவலர்களும் கிராம மக்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர்.


இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இந்நிலையில், ஜோரா தங்களது வீட்டிலிருந்து 10,000 ரூபாயை திருடிவிட்டதாக வீட்டின் உரிமையாளர்கள் கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் ஜோராவை வீட்டுக் காவலில் அடைத்து வைக்கவில்லை என்று கூறினர். இந்தச் சம்பவத்தால், நொய்டாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இந்த வன்முறைச் சம்பவத்தையடுத்து, பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்களை, பணிப் பெண்ணாகச் சேர்ப்பதற்கு குடியிருப்புச் சங்கம் தடை விதித்துள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close