Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெள்ளத்தில் மிதக்கும் வடகிழக்கு மாநிலங்கள்... வருத்தத்தில் மோடி!

அஸ்ஸாமில் பெய்துவரும் கனமழையால், அங்கு பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி, அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்த சோனாவாலை தொலைபேசியில் தொடர்புகொண்டு, தற்போதைய சூழல்குறித்து விசாரித்துள்ளார். மேலும், மத்திய அரசு அஸ்ஸாமுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துதருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

assam flood
 

கடந்த சில தினங்களாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பெய்துவரும் கனமழையால், பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, அருணாச்சலப்பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சலப்பிரதேசத்தின் பாப்பம் பேரே மாவட்டத்தில், நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி  ஐந்து பேர் பலியாகினர். ஒன்பது பேரை காணவில்லை. அஸ்ஸாமில் கனமழைக்கு ஆறு பேர் பலியாகியுள்ளனர். அஸ்ஸாமின் 23 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளத்தில் தத்தளித்த மக்கள், கோலாகாட் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

 


வடகிழக்கு மாநிலங்களில் நிலவிவரும் சூழல்குறித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, “வடகிழக்கு மாநில மக்களுக்கு உறுதுணையாக இந்தியா. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை எண்ணி வருந்துகிறேன். மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துதருவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close