Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி!

’1000 ரூபாய் வரையிலான, ஐஎம்பிஎஸ் (IMPS) பரிவர்த்தனைகளுக்கு, இனிமேல் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது' என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

State Bank of India IMPS
 

ஐஎம்பிஎஸ் என்பது உடனடி பணப் பரிமாற்றச் சேவை. ஆன்லைனில் வேறு ஒருவருக்கு பணத்தை மாற்றுபவர்கள், அதை யாருக்கு அனுப்புகிறோமோ அவரின் வங்கிக் கணக்கு எண்ணும், ஐஎஃப்எஸ்சி (IFSC) எண்ணும் கொடுத்தாலே உடனடியாகப் பணம் மாற்றப்பட்டுவிடும். இந்த உடனடி பணப் பரிவர்த்தனை முறைக்கு எஸ்பிஐ., வங்கி குறிப்பிட்ட வரியையும் கூடுதல் கட்டணத்தையும் வசூலித்துவந்தது. அதன்படி, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் 1000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு, ஐந்து ரூபாய் கட்டணமும் அதற்கான சேவை வரியும் விதிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், 1,000 ரூபாய் வரையிலான ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு, இனி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது. சிறிய அளவிலான ஆன்லைன் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவே இந்த அறிவிப்பு என்று எஸ்பிஐ குறிப்பிட்டுள்ளது. எனவே, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி 1000 ரூபாய் வரை கூடுதல் கடட்ணம் இல்லாமல் ஐஎம்பிஎஸ் பணப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close