Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: சிறைத்துறை டிஜிபி-க்கு சிக்கல்!

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு, தனிச் சமையலறை வசதிகளை விதிமுறைகளை மீறி செய்துகொடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு கர்நாடகா சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணாவும் ஒரு காரணம் என்றும் கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

டிஐஜி ரூபா

கர்நாடகா சிறைத்துறை டிஐஜி ரூபா, கடந்த 10-ம் தேதி பெங்களூரு பரபரப்பன அக்ரஹாரா சிறையில் திடீர் சோதனையில் ஈடுபட்டார். அந்தச் சோதனையில், சசிகலா உள்ளிட்ட பல முக்கிய கைதிகளுக்கு விதிமுறைகளை மீறி செய்துகொடுக்கப்பட்டிருக்கும் வசதிகள் குறித்து கண்டுபிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து, சிறையில் நடக்கும் அத்தனை விதிமுறை மீறல்களையும் ஆதாரத்துடன் பதிவுசெய்து, அதில் சம்பந்தப்பட்ட தனது உயர் அதிகாரிக்கே கடிதம் அனுப்பியுள்ளார், டிஐஜி ரூபா.

தற்போது, கர்நாடாக டிஜிபி மீது குற்றம் சாட்டியுள்ள டிஐஜி ரூபா, சிறை விதிமுறை மீறல்கள் குறித்தும், அதில் சம்பந்தப்பட்ட அத்தனை அதிகாரிகள்குறித்தும் பரபரப்பு பேட்டியை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ரூபா கூறுகையில், ‘பரப்பன அக்ரஹாரா சிறையில் பல விதிமுறை மீறல்கள் நடந்தேறிவருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த சசிகலா தண்டனைக் கைதியாக உள்ளார். இவரிடம் சுமார் 2 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு வழங்கப்பட்ட அத்தனை வசதிகள்குறித்தும், லஞ்சம் வாங்கிக்கொண்டு செயல்பட்ட போலீஸ் அதிகாரிகள், உயர் அதிகாரிகள் என அத்தனை பேர் குறித்த ஆதாரங்கள் என்னிடம் உள்ளன’ என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close