Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டீன் ஏஜ் பெண் வயிற்றிலிருந்து முடிபந்து அகற்றம்..!

டேராடூனில் 16 வயது பெண் வயிற்றில் இருந்த முடிபந்து மருத்துவர்களால் அகற்றப்பட்டுள்ளது. சில குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே இயல்பாக ‘நகம் கடித்தல்’, ‘முடியை சப்புதல்’ போன்ற சில குறிப்பிட்ட பழக்கங்கள் இருப்பதைக் காணலாம்.

டேராடூனில் உள்ள 16 வயது பெண் ஆகன்ஷா குமாரிக்கு சிறு வயதில் இருந்தே தனது முடியை வாயில் வைத்து கடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. பெற்றோர்கள் எவ்வளவோ முயன்றும் ஆகன்ஷா குமாரி தன் பழக்கத்தை கைவிடவில்லை. நாளடைவில் உடல் பலவீனமடைந்து எதையும் சாப்பிட இயலாத நிலையில் வாந்தி எடுக்கத் துவங்கியுள்ளார்.

மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது முடிகள் இணைந்து ஒரு பந்துபோல வயிற்றில் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த முடிப்பந்தை அகற்றியுள்ளனர். வயிற்றின் 80 சதவிகித இடத்தை இம்முடிபந்து ஆக்கிரமித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதை மருத்துவர்கள் ‘ரெப்யூன்ஜல் சின்ட்ரோம்’ என அழைக்கின்றனர். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close